சேலம் மாநகர் பகுதிகளில் தொடர்ந்து கொலை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா மற்றும் குகை பகுதியை சேர்ந்த விமல் குமார் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைத செய்துள்ளனர். சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.