சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பேளூர் சாலையில் வெள்ளாளபட்டியில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்த சரக்கு வாகனம் அனுப்பூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி முன்னாள் ராணுவ வீரர் இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி வந்த போது எதிர்பாராத விதமாக துரைசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி சரக்கு வாகனம் மளிகை கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில் இதில் துரைசாமி சம்பவ இடத்தில் பலியானார். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் துரைசாமி மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.