சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவையொட்டி, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்
தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில்
திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 27. 10. 2023 அன்று
நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு
பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.
திருக்குடமுழுக்கு விழாவையொட்டி வருகின்ற 18. 10. 2023 முதல் 27. 10. 2023 வரை திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்திடவும், திருக்கோவில் வளாகத்தினைச் சுற்றியுள்ள தற்காலிகக் கடைகளை அப்புறப்படுத்திடவும்,
போக்குவரத்து நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணம் மாற்று வழிப்பாதையில் வாகனங்களை அனுமதிப்பது
தொடர்பாக காவல் துறையினர் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது.