சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் வேம்படிதாளம் ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. மேலும் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.