கொட்டும் மழையிலும் வீடுகளில் திருட முயற்சி சிசிடிவி காட்சி

61பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி ஊராட்சிக்குட்பட்ட 9 வது வார்டு ராமநாதபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மர்ம ஆசாமி வீடுகளில் திருட முயற்சித்துள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த வீட்டின் உரிமையாளர்கள் கூச்சலிடவே திருட வந்த நபர் தப்பி ஓடியுள்ளார். உடனடியாக வீட்டின் உரிமையாளர் திருடன் வந்த நபரை துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அப்ப பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றி திரிவதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி