சேலம் மாவட்டம் கரும்பாலை பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஓமலூர் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த வாகனம் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் இறந்த நபரின் உடல் மீது ஏறி சென்றன. இதனால் அந்த நபரின் உடல் உறுப்புகள் சாலையில் சிதறின.
இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.