சேலம் அழகாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் சேலம் பெரிய புதூர் அரசு மருத்துவமனை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கந்தம்பட்டி, கோமாளி வட்டத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (31), நேசமணி (23), தைலாபுரத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1, 600 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று ரெட்டியூரில் எஸ்ஐ சேகர் ரோந்து சென்ற போது வலசையூர் மேட்டு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.