வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் வருகிற 9-ந் தேதி வரை சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது என சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.