சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகா சுன்டக்காப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது76). இவர் சுன்டகாப்பட்டி காட்டுவளவில் உள்ள 5 முக விநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் தினமும் பூஜை செய்து விட்டு மாலை 4 மணிக்கு வீட்டுக்கு செல்வார். பூசாரி வெங்கடாசலம் நேற்று காலை கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவில் முன்பு இருந்த 2 மணிகள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாச்சினம்பட்டி பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (31), பாண்டித்துரை (26) ஆகியோர் கோவில் மணியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.