பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி மாநகர் மாவட்ட இளைஞர் சங்க சார்பில் ரத்ததானம் முகாம் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மாநகர மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம் மாநில பசுமைத்தாயக இணை செயலாளர் சத்ரியசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். இந்த முகாமில் இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், சுமன், உள்பட 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.