சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் கேஷியராக பணியாற்றுபவர் கணேசன். இந்த கடைக்கு களரம்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வந்து டீ குடித்துள்ளார். பின்னர் கேஷியர் கணேசன் இடம் மகேந்திரன் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது கணேசன் பணம் கேட்டபோது மகேந்திரன் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பிஸ்கட் வைத்திருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்துள்ளார். இது பற்றி கணேசன் கிச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.