மலேசியா இன்டி சர்வதேச பல்கலைக்கழக சார்பு துணைவேந்தர் வருகை

55பார்த்தது
மலேசியா இன்டி சர்வதேச பல்கலைக்கழக சார்பு துணைவேந்தர் வருகை
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியானது மலேசியாவில் உள்ள இன்டி சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் மலேசியா இன்டி சர்வதேச பல்கலைக்கழக சார்பு துணைவேந்தர் கோ ஹாங் வெண், பேராசிரியர், சர்வதேச தொடர்புத்துறை இயக்குனர் அரசுராமன் ஆகியோர் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு வருைக தந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இதையடுத்து கோ ஹாங் வெண், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி இன்டி பல்கலைக்கழக கியூ எஸ் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என பேசினார். பின்னர் அரசுராமன் நாலெட்ஜ் பொறியில் கல்லூரி மாணவர்களுக்கு இன்டி பல்கலைக்கழகத்தில் ஒரு பருவம் பயிலுவதற்கு சலுகை கட்டணம் வழங்கப்படும் என்று பேசினார். மேலும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மற்றும் இன்டி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தரமான ஆய்வு கட்டுரைகளை வெளியிடவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைபுரியும் என்று எடுத்துரைத்தார். இதில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாசன், செயலாளர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், துணை முதல்வர் விசாகவேல் மற்றும் அனைத்து இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி