சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட காடையாம்பட்டி ஏரி பகுதியில் கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது கிராம நிர்வாக அலுவலரை கண்டதும் மரத்தை வெட்டியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த போலீசார், கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்ற டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பொக்லைன் டிரைவர் சிவா, டிராக்டர் டிரைவர் கார்த்திக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.