சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தொழிலாளி. இவரது மனைவி சுமதி (வயது 45). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றனர். அவர்கள் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி வீட்டுக்குள் சென்று பீரோவில் பார்த்தபோது. அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.