ஓமலூரை அடுத்த சரக்கபிள்ளையூர் பெரியநாகலூர் கிராமத் தில் செல்வ விநாயகர், பெரிய மாரியம்மன் கோவில் உள் ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கு முகூர்த் தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீர்த்தக்குடம் எடுப்பவர்களுக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியும், யாகசா லையை சுற்றி முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சியும், கிராம சாந்தி பூஜை நடந்தது.
விழா நாட்களில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், குபேர வைபவ மகாலட்சுமி ஹோமம், கோபுர தானிய பூஜை யும், வாஸ்து சாந்தி பிரவேச பலி நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை மங்கள இசை, 2-ம் கால யாக வேள்வி ஆரம்பம், காயத்திரி திரவிய ஹோமம், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. காலை 11 மணிக்கு புதிய சிலைகள், சயனாதிவாசம், தனாதிவாசம், கண்திறப்பு, கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் 3-ம் கால யாக வேள்வி ஆரம்பம், காயத்ரி ஹோமம், திரவிய ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங் குதல் நிகழ்ச்சியும் நடந்தது.