விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை யடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் இடங்கணசாலை நகராட்சி மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றியம் உள்ளிட்ட ஊர்களில் பட்டாசு விற்பனையாளர்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே இடத்தில் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்ய இடங்கணசாலை நகராட்சி, ரெட்டியூர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த தேர்வின் போது சங்ககிரி ஆர்டிஓ நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் ரமேஷ் , இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணைத் தலைவர்
தளபதி, ஆணையாளர் சேம்கிங்ஸ்டன், மகுடஞ்சாவடி ஆர்ஐ செல்வராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் , நகர மன்ற உறுப்பினர்கள் , சங்ககிரி தீயணைப்பு போலீசார் மற்றும் மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீசார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.