தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி

477பார்த்தது
அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு வார விழாவையொட்டி சேலம் மாசுக்கட்டுப்பாட்டு துறை சார்பில் நடந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி திருவள்ளுவர் சிலை வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது
இந்தப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது தகவல் அறியும் உரிமை சட்டம் குடிமக்களின் அதிகாரமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் எனவே அதை நீதிக்கும் நியாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும் அரசு வழங்கும் சலுகைகள் அனுமதிகள் மற்றும் அங்கீகாரங்களின் விவரங்களை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் வெளிப்படையான சமூகத்தை உருவாக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய அட்டைகளை கையில் ஏந்தி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி