சேலம் தலைமை அஞ்சலகம் மற்றும் அஸ்தம்பட்டி துணை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஆதார் சேவை வழங்கப்படுகிறது. ஆதார் புதிய சேவை பெறுவதற்கும், 5 -7 வயது மற்றும் 15-17 வயது குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் சேவை பெறுவதற்கும், கட்டணம் ஏதும் இல்லை. பெயர் திருத்தம், முகவரி திருத்தம், தொலைபேசி எண் மாற்றம் போன்ற மற்ற சேவைகளுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 ஆதார் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.