சேலம் மாவட்டத்தில் சிறுவகை கனிம குவாரி குத்தகைதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மொத்த இசைவாணைச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் திருமதி ஜெயந்தி அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள சிறுவகை கனிமம் (Minor Minerals) ( www. mimas. tn. gov. in (Mineral Management System) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குவாரி குத்தகைதாரர்கள் மேற்படி இணையதளத்தில் பதிவு செய்து இணையதளம் வாயிலாக சீனியரேஜ் தொகை செலுத்தி குவாரியிலிருந்து கனிமங்களை கொண்டு செல்ல மொத்த இசைவாணைச் சீட்டு (Bulk Transport Permit) வழங்கும் முறை இன்று 16. 09. 2024 முதல் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, அனைத்து சிறுவகை கனிம குவாரி குத்தகைதாரர்கள் www. mimas. tn. gov. in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மொத்த இசைவாணைப் (Bulk Transport Permit) பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் திருமதி. ஜெயந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.