விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பொங்கல் விழா கிராமிய சங்கமம் என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கிராமங்கள் போன்று கல்லூரி வளாகத்தில் அரங்குகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைகளான கும்மி பாட்டு, நடவு பாடல், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற பல்வேறு கலைகளை துறை மாணவர்கள் நடனம் வழியாக பிரதிபலித்தனர். மேலும் கல்லூரி சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு கிராமப்புற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் அனைத்து ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் துறையின் டீன் செந்தில்குமார் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். ஏற்பாடுகளை துறையின் மாணவ சங்க உறுப்பினர்கள், நுண்கலை அமைப்பின் உறுப்பினர்கள், ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.