காவல்துறை கொடி அணிவகுப்பு

76பார்த்தது
சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, இ. கா. ப. , அவர்கள் உத்திரவின்படி, இன்று காவல் துணை ஆணையாளர் (தெற்கு) மதிவாணன் அவர்கள் தலைமையில், காவல் உதவி ஆணையாளர் அன்னதானப்பட்டி ராமமூர்த்தி, கொண்டலாம்பட்டி சுரேஷ், போக்குவரத்துப் பிரிவு தென்னரசு, காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் (CISF) மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 வாக்குப்பதிவை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கையூட்டும் வகையில், சேலம் மாநகர காவல்துறையினரின் கொடி அணிவகுப்பானது கொண்டலாம்பட்டி சரக எல்லைக்குட்பட்ட வேடுகத்தாம்பட்டி பெருமாம்பட்டி சந்திப்பில் இருந்து ஆரம்பித்து இனாம் வேடுகத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி, பி. வி. பள்ளி வழியாக சிவதாபுரம் பஸ் நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி