திருடனை மடக்கிப்பிடித்த போலீசாருக்கு மாநகர கமிஷனர் பாராட்டு.

56பார்த்தது
திருடனை மடக்கிப்பிடித்த போலீசாருக்கு மாநகர கமிஷனர் பாராட்டு.
சேலம் மாவட்டம் , அரியானூர் அருகே கொம்பாடிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் சத்தியமூர்த்தி , காவல் கட்டுப்பாட்டு அறை தலைமை காவலர் வேணுகோபால் மற்றும் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய இரவு ரோந்து தலைமை காவலர் குமரேசன் ஆகியோர் 30 - ம் தேதி இரவு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது  அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தேக நபர்களை நிறுத்திய போது தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது நண்பர் இருவரும் தப்பியோட முயற்சித்த போது துரிதமாக செயல்பட்டு  பிடித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதற்கு போலீசார் சிறப்பாக பணியாற்றியமைக்காக சேலம் மாநகர காவல் ஆணையாளர் காவலர்களை பாராட்டி வெகுமதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி