மல்லூர் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

60பார்த்தது
மல்லூர் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. அங்கு ஆண்டுதோறும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இறுதி பருவத்தேர்வுக்கு முன் பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு வசதி செய்யப்படுகிறது. 

அதன்படி கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சென்னையில் உள்ள மெட்ராஸ் என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரி பிரசன்னா நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்வு செய்துள்ளார். முன்னதாக கல்லூரி தலைவர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி