சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி: மாணவர்கள் சாதனை

85பார்த்தது
சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி: மாணவர்கள் சாதனை
கோவையில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி உலக மூவேந்தர் சிலம்ப குழுவை சேர்ந்த 60 மாணவ-மாணவிகள் சிலம்ப ஆசான்கள் கருப்பண்ணன், பெரியண்ணன், தலைமையில் பயிற்சியாளர்கள் மணிகண்டன், கோவிந்தராஜ், மீனா, தரணி, ஸ்ரீமணிகண்டன், சண்முகப்பிரியா ஆகியோருடன் கலந்து கொண்டனர். இந்த மாணவ-மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை சேலம் மேற்கு மாவட்ட தி. மு. க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நடுவனேரி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் சிவமலை மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி