கோனேரிபட்டியில் ரூ. 12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

54பார்த்தது
கோனேரிபட்டியில் ரூ. 12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கோனேரிபட்டி உபகிளை தொடக்க வேளாண்மை கூட் டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் கோனேரிபட்டி, தேவூர், நெடுங்கு ளம், சிலுவம்பாளையம், ஊமரெட்டியூர், குள் ளம்பட்டி, செங்கானூர், பூமணியூர், ஒக்கிலிப் பட்டி, தண்ணித்தாசனூர் கொட்டாயூர், நல்ல தங்கியூர், கல்வடங்கம். , சென்றாயனூர், ஒட் சக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவ சாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் பி. டி. ரக ரக பருத்தி குவிண் டாலுக்கு ரூ. 5, 499 முதல் ரூ. 6, 986 வரை ஏலம் நடந்தது. மொத்தம் 475 பருத்தி மூட்டைகள் ரூ. 12 லட்சத்துக்கு ஏலம் போனது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி