அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சுற்றுசூழல் விழிப்புணர்வு

71பார்த்தது
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சுற்றுசூழல் விழிப்புணர்வு
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் துறையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக், மாசு விளைவிக்கும் பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வனவர் முருகையன், வனபாதுகாவலர்கள் தினேஷ், மணிகண்டன், ருக்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 75 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டு அவை மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் சின்னம் வரையப்பட்டு அதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அவசியம் குறித்து துறை மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் துறையின் சார்பில் 250 மரக்கன்றுகள் சேவகன் அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி