வகுப்பறையில் மயங்கி விழுந்த 10-ம் வகுப்பு மாணவி சாவு

1079பார்த்தது
வகுப்பறையில் மயங்கி விழுந்த 10-ம் வகுப்பு மாணவி சாவு
பனமரத்துப்பட்டி பேரூராட்சி காளியாகோவில் புதூர் குட்டகரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் மேகவர்த்தினி (வயது 14). இவர், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தாயார் சத்யா, பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து விட்டதால் மேகவர்த்தினி தாத்தா- பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். மேகவர்த்தினி நேற்று காலை பள்ளிக்கு வழக்கம் போல் வந்துள்ளார். அங்கு இறைவணக்க கூட்டத்திற்கு பிறகு வகுப்பறைக்கு சென்ற அவர், தான் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வந்துள்ளதாகவும், தனக்கு மயக்கம் வருவதாகவும் தோழிகளிடம் கூறியுள்ளார்.

அவர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். அதற்குள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த மேகவர்த்தினியை ஆசிரியர்கள் உடனடியாக அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி மேகவர்த்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி