சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள தானக்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சுந்தரவள்ளி (60 ). இவர் கடந்த 30 -ம் தேதி அன்று காகாபாளையம் - ஆட்டையாம்பட்டி ரோடுயான தானக்குட்டிபாளையம் பகுதியில் கொய்யா காய் விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது அவ்வழியே டூ வீலரில் வந்தவர்கள் கொய்யா காய் வாங்குவது போல் நடித்து சுந்தர வள்ளியின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை பறித்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இது குறித்து சுந்தரவள்ளி ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.