சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவாரப்பட்டி ஊராட்சியில் இன்று ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைசெயலாளர் சுரேஷ்குமார் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் உமாசங்கர், மற்றும் பனமரத்துபட்டி ஒன்றிய துணை தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.