சேலம் மாவட்டம், இளம்பிள்ளை , பண்டரிநாதன் கோயில் பகுதியில் வசிக்கும் பச்சமுத்து (50). பாமக பிரமுகரான இவர் தனது காரில் மகனுடன் ஜலகண்டாபுரம் செல்ல முன் சீட்டில் மகனும் பின் சீட்டில் இவரும் அமர்ந்திருக்க டிரைவர் காரை ஓட்டிச் சென்று இருந்தார். அப்போது இளம்பிள்ளை அடுத்த கறிக்கடை பஸ் ஸ்டாப் அருகே கார் நின்றிருந்தை அறிந்த பாமக பிரமுகர் கார் டிரைவர் நிறுத்தி உள்ளார். இவர் பின்னால் வந்த இரும்பு லோடு பாரம் ஏற்றி வந்த மினி டெம்போ எதிர்பாராதமாக இரும்பு கம்பிகள் பாமக பிரமுகர் காரின் பின்பக்கம் சரிந்து விழுந்ததில் காரின் பின்பக்கம் முற்றிலும் சேதமற்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து. மகுடஞ்சாவடி போலீசார் டெம்போவை ஒட்டி வந்த இளம்பிள்ளை பாட்டப்பன் கோயில் பகுதியை சேர்ந்த சுதாகர் மகன் சுபாஷ் ( 23) பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டன.