இளம்பிள்ளை அருகே வழித்தட பிரச்சனை.. அடிதடி, சாலை மறியல்

50பார்த்தது
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த நல்லணம்பட்டி பகுதியில் வழித்தட பிரச்சனையில் இருதரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தாக்கியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சித்தர் கோயில்-இளம்பிள்ளை செல்லும் சாலையான நல்லணம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் மகுடஞ்சாவடி எஸ்ஐ ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி