சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட செட்டிப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் விவசாயி நடேசன்(65 )இவர் தனது வீட்டின் முன்பு 50 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இரவு திடீரென மழை பெய்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5 ஆடுகளை திருடி சென்றுள்ளனர். மேலும் அவரது வீடு மற்றும் ஆட்டு கொட்டகைகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்திருந்த போதிலும் மின்சாரம் இல்லாததால் சிசிடிவி கேமராவில் ஆடு திருடி சென்றது பதிவாகவில்லை மேலும் நடேசன் இதுகுறித்து தேவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அதே பகுதி வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை பதிவாகியுள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.