சேலம் புதுரோடு அருகே
உள்ள சோளம்பள்ளம்
பகுதியை. சேர்ந்தவர்
தங்கம்மாள் (62). இவர்
கடந்த ஜூன் மாதம்
3-ந்தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 13பவுன் தாலி கொடியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றனர் இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இதில் தங்கம்மாள் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்து சென்றது காரைக்குடி. கோட்டையூர் கணேசபுரம் பகுதியைச்சேர்ந்த
பாண்டியன் (32), விழுப்புரம்
விக்கிரவாண்டி மதுராந்தகம்
விஸ்வரெட்டிப்பாளையம்
பகுதியைச்சேர்ந்த ராஜ்குமார் (21)
என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீஸ்
இன்ஸ்பெக்டர் கந்தவேல்
தலைமையில் போலீசார் ராமநாதபுரம் மாவட்ட கிளை சிறையில் இருந்த 2 பேரையும் காவலில் எடுத்து
விசாரணை நடத்தினர். விசாரணையில்
கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில்
தாலிக்கொடியை அடமானம்
வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார்
82. 6 கிராம் தாலி கொடியை
மீட்டனர்.