சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் பாரத் பிளாக் செயின் என்ற தொழில்நுட்ப கருத்தரங்கம், ஐ. டி. எஸ். என்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப் பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் சச்சிதா னந்தம் வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனர் சீனிவாசன் தைைலம தாங்கினார்.
சிறப்பு பேச்சாளர்களாக பிளாக்செயின் தொழில்நுட்ப வல்லு னர்கள், ஐடியஸ் நிறுவன தகவல் தரவு அமைப்புகளின் உலக துணை தலைவர் வொருகாண்டி அரவிந்த், வணிக தலைமை அதிகாரி சுனில் யாதவல்லி, எப். ஏ. பி. சி. எல். எல். சி. நிறுவன தொழில்நுட்ப தலைவர் அனுப்குமார், ஐ. பி. எம். நிறு வன பிளாக் செயின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் கணேஷ் குமார், பிரிண்ட்2 பிளாக் நிறுவன இணை நிறுவனர் விக் னேஷ் பாபு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு வளர்ந்து வரும் பிளாக் செயின் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐடியஸ் நிறுவன தயா ரிப்பு மேலாளர் கிஷோர் பேசினார். வொருகாண்டி அரவிந் துக்கு, கல்லூரி துணை முதல்வர் விசாகவேல் நினைவு கேட யம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாலெட்ஜ் அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ் ணன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.