செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

82பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.  சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் தி. மு. க. வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

இவருக்கு 50 முறைக்கு மேல் நீதிமன்றக் காவல் நீட்டிப்பை வழங்கிய நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (செப். 26) காலை 10. 00 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.  

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து சுமார் 15 மாதங்களுக்கு பிறகு இன்று (செப். 26) செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வருகிறார். இதையடுத்து, புழல் சிறை முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி