கிச்சிப்பாளையம்: ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

84பார்த்தது
கிச்சிப்பாளையம்: ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் கிச்சிப்பாளையம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் பிரபாகர். ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் திருமணம் ஆன ஒரே நாளில் பிரபாகரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் அந்தப் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, வேறு ஒரு பெண்ணை பிரபாகர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று(செப்.20) காலை பாட்டி வீட்டில் பிரபாகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி