கோடை விடுமுறைகள் முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையில் இருந்தால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசு பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.