சோமேஸ்வரர் கோயில் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை

64பார்த்தது
சோமேஸ்வரர் கோயில் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி கோபுரத்தில் வைக்கப்படும் புதிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை 8. 30 மணிக்கு மேல் 10. 15 மணிக்குள் கோபுரகலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

அதனையடுத்து கோபுரத்தில் வைக்கப்படும் புதிய கலசங்களுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து முதற்காலகட்ட வேள்வி பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி