அக்கமாபேட்டை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை

59பார்த்தது
அக்கமாபேட்டை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை, பாவடிதிடலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் தமிழ்புத்தாண்டு தினத்தினையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தமிழ்புத்தாண்டு தினத்தினையொட்டி ஸ்ரீ சுப்ரமணியர் உடனமர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறது அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமிக்கு பல்வேறு பழ வகைகளைகொண்டு சிபு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமிகளை வணங்கிச் சென்றனர். அதனையடுத்து மாலையில் ஸ்ரீ சுப்ரணியர் உடனமர் வள்ளி, தெய்வானை உற்சமூர்த்தி சுவாமிகள் அமர்ந்து வந்த திருத்தேரினை பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சுவாமியை வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி