சேலத்தில் உள்ள அன்னதானப்பட்டி பழனியப்பா காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு இன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.