சங்ககிரி நகராட்சியாக அரசாணை வெளியீடு: திமுகவினர் கொண்டாட்டம்

61பார்த்தது
சங்ககிரி நகராட்சியாக அரசாணை வெளியீடு: திமுகவினர் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் சங்ககிரி சிறப்புநிலை பேரூராட்சி 83 ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை வரவேற்று கொண்டாடும் விதமாக சங்ககிரி நகர திமுக சார்பில் சங்ககிரி பழைய பஸ் நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்ட திமுகவை அவைத்தலைவர் தங்கமுத்து தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சங்ககிரி நகராட்சி மன்றத் தலைவர் மணிமொழி முருகன், நகராட்சி மன்றத் துணைத்தலைவர் அருண் பிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி