சேலம்: விஜய்யை கண்டித்து தவாகவினர் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்கள்

61பார்த்தது
சேலம்: விஜய்யை கண்டித்து தவாகவினர் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்கள்
சேலம்: நடிகர் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் பரிசுகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். கடந்த 30ஆம் தேதி முதல் கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது ஒருசிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. 

இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்ச்சையாக பேசியுள்ளார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வேல்முருகனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக நேற்றைய தினம் சென்னையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று சேலம் அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, பழைய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜயை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்தப் போஸ்டரில், "எச்சரிக்கை எச்சரிக்கை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களே அடக்கி வாசியுங்கள் இல்லையெனில் அடக்கப்படுவீர்கள் தமிழக வெற்றிக்கழக ரசிகர் குஞ்சுகளுக்கு எச்சரிக்கை என எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகர் விஜயின் புகைப்படத்தை அளித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இப்படிக்கு மாணவர் அணி பொறுப்பாளர் கரும்புலி கவியரசன் என்று பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி