கெங்கவல்லி வனச்சரகத்தில் சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர், இன்று கெங்கவல்லி கடம்பூர் சாலையில் காப்புக்காடு வனப்பகுதியில் கிடந்த மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து, பேரூராட்சி குப்பை கிடங்கில் ஒப்படைத்தனர். பேரூராட்சி பணியாளர்களும், பொதுமக்களும், வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.