சேலம், சூரமங்கலத்தில் உள்ள சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிந்தார். பொதுமக்கள் கூறிய குறைகளுக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.