சேலம் ஓமலூர் பக்கமுள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மைதிலி (19). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. நேற்று முன்தினம்(செப்.16) மாமனாருடன் மைதிலி, ஜெராக்ஸ் எடுப்பதற்காக தாரமங்கலம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து திடீரென மைதிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பஸ் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. 8 மாத குழந்தையுடன் அவர் மாயமானார்.
இதுகுறித்து மைதிலியின் தாய் செல்வி, தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்நேரத்தில் தாய் செல்விக்கு செல்போனில் பேசிய மைதிலி, தன்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு செல்போனை சுவிட்ஆப் செய்துவிட்டார். அவர் எங்கே சென்றிருப்பார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.