பராமரிப்பு பணி: ஈரோடு- ஜோலார்பேட்டை ரெயில் பகுதியாக ரத்து

762பார்த்தது
பராமரிப்பு பணி: ஈரோடு- ஜோலார்பேட்டை ரெயில் பகுதியாக ரத்து
சேலம் வழியாக, ஈரோடு- ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டை ரெயில்வே யார்டில் ரெயில்வே பாதை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு- ஜோலார்பேட்டை பயணிகள் ரெயிலானது. இன்று (10-ம் தேதி) மற்றும் அக்டோபர் 12, 13, 21, 23 ஆகிய தேதிகளில், ஈரோடு - திருப்பத்தூர் வரை மட் டுமே இயக்கப்பட உள்ளது. திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறு மார்க்கத்தில் ஜோலார்பேட்டை - ஈரோடு பாசஞ்சர் ரெயில் இன்று (10-ம் தேதி) மற்றும் 12, 13, 21, 28- ஆகிய தேதிகளில் திருப்பத்தூர்- ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் வரை ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி