தமிழ் குடமுழுக்கு கூட்டு இயக்கம் சார்பில் சேலம் இளம்பிள்ளையை சேர்ந்த பதினெண் சித்தர் குருகுல பள்ளியின் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் 10 பேர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் சூலாயுதம் ஏந்தி வந்தனர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவிட்டு
இது குறித்து செய்தியாளரிடம் கூறும்போது சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் பல நூறு ஆண்டு காலம் பழமை வாய்ந்த திருக்கோவில் இந்த திருக்கோவிலில் வருகின்ற 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது இந்த நிலையில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகம் பிரதிஷ்டை பூஜை என சமஸ்கிருதத்தில் மட்டுமே கோட்டை மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு பூஜையாக அழைப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து திருக்கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளனர் ஆனால் அதற்கு மாறாக கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது எனவே கோட்டை மாரியம்மன் கோவிலில் திருக்குடமுழுக்கு மற்றும் அனைத்து கோவில்களிலும் பூஜை சித்தர்கள் அருளிய தமிழ் மந்திரங்கள் நாயன்மார்களின் திருமுறை ஆழ்வார்களின் நாலாயிரதிவ்ய பிரபந்த தோத்திரங்கள் தமிழின ஆச்சாரியார்களால் ஓதப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா முழுக்க முழுக்க தமிழில் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.