சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் ஏ.எம்.ஐ. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற நாலெட்ஜ் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி அறக்கட்டளை நிறுவனர் பி. எஸ். எஸ். சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் துணைத்தலைவராக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் சூசன் ஜேங், 22 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டினார். பேராசிரியர் ஜெகதீஷ்ராஜா வரவேற்று பேசினார்.
மேலும் ஏ. எம். ஐ. நிறுவன இந்தியா தலைவர் அரவிந்த் ஜெயபால் பேசுகையில், ஆரம்ப கட்டத்தில் ஊதியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட அனுபவத்தைப் பெற முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். ஏ. எம். ஐ. நிறுவன இந்தியா பயாஸ் என்ஜினீயரிங் துணைத்தலைவர் ரமேஷ் ராஜூ, மனிதவள தலைவர் சாந்தா, மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைமை மேலாளர் செந்தில்குமார், மூத்த திட்ட மேலாளர் தன்ராஜ், மனிதவள மேம்பாட்டு துறையின் மூத்த ஆலோசகர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்லூரி துணை முதல்வர் விசாகவேல், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் ராஜேந்திரன் ஏ.எம்.ஐ. எம்படேட் தொழில்நுட்ப சிறப்பு மையத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இணை பேராசிரியை கல்பனாதேவி நன்றி கூறினார்.