நிலவாரப்பட்டியில் வரும் 27ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி

568பார்த்தது
நிலவாரப்பட்டியில் வரும் 27ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி
சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இந்த
போட்டிக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி. மு. க. துணைச்செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் வரவேற்று
பேசுகிறார். மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் தலைமை தாங்குகிறார். கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைக்கிறார். இதில் தி. மு. க. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. , மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், ஊராட்சிக்குழு துணை தலைவர் சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரியா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் ராஜாராம் நன்றி கூறுகிறார். இதற்கான
ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் நிலவாரப்பட்டி தங்கராஜ் செய்து வருகிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி