ஐ. டி. நிறுவன ஊழியரின் மனைவி தற்கொலை

81பார்த்தது
ஐ. டி. நிறுவன ஊழியரின் மனைவி தற்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். சென்னையில் உள்ள ஐ. டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷனி (வயது 27). தற்போது பிரியதர்ஷனியின் வீட்டில் தந்தை ராமன், தாய் ஆகியோர் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். தாய், தந்தை மற்றொரு அறையில் படுத்து தூங்கினர்.
இதையடுத்து நேற்று காலை பிரியதர்ஷினி அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சங்ககிரி போலீசார் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி